Tuesday, February 9, 2010

ஆக்ரமிப்பின் பிடியில் அண்ணாமலை

பலகோடி மக்களின் நம்பிக்கையும் ஆதரவற்ற அனைவருக்குமான கடைசி புகலிடமும் இறைவனே,இயற்கையோடு இணைந்த வாழ்வும் இயற்கையையே இறைவழிபாடாகவும் வாழும் வாழ்க்கைமுறை இந்துக்களுடைய்து.எந்த ஒரு சமுதாயத்திலும் தவறுகள் நடப்பதும் திருத்திகொள்வதும் இயல்பானதுதான் என்றாலும் கோவில் சொத்துக்களை அபகரிப்பதும்,ஆக்ரமிப்பதும் நமக்கே உரிமையான தனித்தன்மை.அங்கே தொட்டு ,இங்கே தொட்டு அடிமடியில் கைவைப்பது என்பது இதுதானா? இறைவனே மலையாக திகழும் திருவண்ணாமலை மீதே ஆன்மீகம் என்ற போர்வையில் , ஆசிரமம் அமைக்கிறேன் என்று மரங்களை வெட்டுவதும் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.தினமொரு குடியிருப்பு தோன்றி எங்களை கேட்க யார் இருக்கிறார்கள் நாங்கள் வைத்ததே சட்டம் என்று மலையில் ப்ளாட் போடாததுதான் பாக்கி நகராட்சி,வனத்துறை,வருவாய்துறை,சுற்றுச்சூழல்,இந்து சமய அற நிலையதுறை இத்தனை துறைகளும் கண்மூடி வாய்பொத்தி மௌனம் காக்க என்ன காரணம்? லட்சகணக்கில் அவரவர்கள் நலனுக்காகவே அண்ணாமலையை வலம் வருவார்களே தவிர கேட்க யார் இருக்கிறார்கள்?